மலபாரின் சமூக சேவை

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தையொட்டி 12 பள்ளிவாசல்களில் 70,000 தண்ணீர் பாட்டில்கள், 10,000 நோன்பு அட்டவணைகளை வழங்கியுள்ளது. மலபார் பள்ளிவாசலிலும் அப்துல் கஃபூர் பள்ளிவாசலிலும் சுமார் 10,000 இனிப்புப் பொருள் கொண்ட பெட்டிகளையும் அந்நிறுவனம் மக்களுக்கு வழங்கியது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தச் சேவையில் மலபார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. “சமூகத்தில் அனைவரிடத்திலும் அன்பையும் பரிவையும் பரப்புவதன் நோக்கத்தில் எங்கள் நிறுவன ஊழியர்கள் இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ளனர்,” என்று கூறினார் அந்நிறுவனத்தின் வட்டார இயக்குநர் திரு உவைஸ் கொலொகான்டி.