கம்பன் விழாவில் பார்வையாளர்களைக் கவர்ந்த மாணவர்களின் நடிப்புத் திறன்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய கம்பன் விழாவில் சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் நடிப்புத் திறன் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அந்தக் கழகத்தின் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் எழுதிய இலக்குவன் பற்றிய குறுநாடகத் திற்கு மாணவர்கள் உயிர் கொடுத் தனர். பள்ளியின் ஆசிரியர்கள் திருமதி கங்கா, திரு. வின்சண்ட் ராஜ் ஆகியோரின் உதவியுடன் இவண் புரோடக்ஷன்ஸ் நிறுவனர் திரு. எஸ்.என்.வி. நாராயணன் நாடகத்தை இயக்கியிருந்தார். உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் இம்மாதம் 21ஆம் தேதி எழுத்தாளர் கழகம் நடத் திய கம்பன் விழாவில் இந்தக் குறுநாடகம் அரங்கேறியது.

முன்னதாக பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 வரை சிறப்புப் பட்டிமன்றம் நடந்தது. தமிழகத்தின் ஆர்.எம்.கே. பொறியியல், தொழில்நுட்பக் கல் லூரி முதல்வர் முனைவர் த. ரெங் கராசா பட்டிமன்றத்துக்கு நடுவ ராகப் பணியாற்றினார். இராமன், தம்பியராக ஏற்றுக் கொண்ட மூவரில் ஏற்றம் பெற்ற வன் குகனே என்று முனைவர் க. இராஜகோபாலனும் திரு. சுப. அரு ணாசலமும் வாதிட்டனர்.

சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த சிங்கப்பூருக்கான இலங்கைத் துணைத் தூதர் திரு. அமீர்அஜ்வத்துக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு நா. ஆண்டியப்பன் (வலது). இடப்பக்கம் கழகத்தின் செயலாளர் திரு சுப. அருணாசலம் உள்ளார். படம்: நாதன் வீடியோ

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற இருக்கும் இந்திய
கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இந்தியக் கைவினை, விளையாட்டுகள் நிகழ்ச்சி.
இந்த இலவச நிகழ்ச்சி இம்மாதம் 30, 31வது தேதிகளில் நடைபெறும். சிங்கப்பூர் படம்: மரபுடைமை விழா

18 Mar 2019

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2019