உலக அங்கீகாரம் தேடும் சிங்கப்பூர் உணவங்காடி கலாசாரம்

வைதேகி ஆறுமுகம்

சிங்கப்பூரின் உணவங்காடி நிலையக் கலாசாரத்தை ‘யுனெஸ்கோ,’ அமைப்பின் கலாசாரம், மரபுடைமைப் பட்டியலில் இடம்பெறச் செய்யும் முயற்சியாக சிங்கப்பூர் அதைப் பரிந்துரை செய்யவுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தேசிய தினப் பேரணி உரையின்போது பிரதமர் லீ சியன் லூங் இதனை அறிவித் தார். அந்த வகையில் சிங்கப்பூரின் அடையாளமாகத் திகழும் ‘ஹாக் கர்’ கலாசாரத்தைத் திருமதி முத்துலட்சுமியின் கடை பிரதிபலிக் கிறது. காலை 7.30 மணிக்கெல்லாம் சுடச்சுட 150 வடைகளை விற்று முடிக்கும் ஹெவன்ஸ் (heavens) உணவங்காடி நிலையக் கடை முதலாளி திருமதி முத்துலட்சுமி வீரப்பனின் கைப்பக்குவத்தை அறிந்தவர்கள் ஏராளம் என்று கூறினால் அது மிகையாகாது. கிம் மோ சாலை புளோக் 20ல் அமைந்துள்ள இவ்வுணவங் காடி நிலையக் கடை 22 ஆண்டு களாக ஒரு குடும்ப வியாபாரமாக நடத்தப்பட்டு வருகிறது.

தனது நண்பரின் கடையை எடுத்து நடத்திய 55 வயது திரு மதி முத்துலட்சுமி தொடக்கத்தில் பல இன்னல்களைச் சந்தித்திருந் தாலும் தன் வியாபாரத்தை எப்படி யாவது முன்னேற்ற வேண்டும் என்ற தன்னம்பிக்கையில் ருசி யான உணவு வகைகளை வழங்கி தனது வாடிக்கையாளர்களின் மன தில் மெல்ல இடம் பிடித்தார்.

கிம் மோ சாலை புளோக் 20ல் செயல்படும் ஹெவன்ஸ் உணவங்காடியின் (இடமிருந்து) உரிமையாளர் திருமதி முத்துலெட்சுமி வீரப்பன், 55, அவருடைய சகோதரிகள் திருமதி மாலா வீரப்பன், 49, திருமதி கலா வீரப்பன், 53. படம்: திமத்தி டேவிட்