வெள்ளி வென்று சிந்து சாதனை

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பூப்பந்துப் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங் கனை பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தைவானின் தாய் சு யிங்கிடம் 21=13, 21=16 என நேர்செட்களில் சிந்து தோல்வியைத் தழுவினார். பிரதான பூப்பந்துப் போட்டிகளில் தங்கம் வெல்ல சிந்து கடுமையாகப் போராடி வருகிறார். இருப்பினும் தங்கப் பதக்கம் அவருக்கு எட்டாக் கனியாக இருந்து வருகிறது. பல போட்டிகளில் அவர் இறுதி ஆட்டம் வரை சென்றுள்ளார். ஆனால் கடைசியில் அவருக்கு வெள்ளிப் பதக்கம்தான் கிடைக் கிறது.

இருப்பினும், ஆசிய விளை யாட்டுப் போட்டிகளில் பெண் களுக்கான ஒற்றையர் பிரிவு பூப்பந்துப் போட்டியில் இந்தியா வுக்காக முதல் வெள்ளிப் பதக்கத்தை சிந்து வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பூப்பந்துப் போட்டியில் இந்தியா வெண்கலம் மட்டும் வென்றிருந்தது.

 

அரையிறுதி ஆட்டத்தில் சிந்துவிடம் தோற்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் பெற்றார். அபாரமாக விளையாடி இறுதிப் போட்டி வரை சென்று வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்து (இடது). அவருக்குப் பக்கத்தில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால். படம்: இபிஏ, இஎஃப்இ

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பார்சிலோனாவின் லயனல் மெஸ்ஸி இரு கால்களையும் உயர்த்தி யுனைடெட் கோல் கம்பத்தை நோக்கி உதைக்கிறார். நேற்றைய ஆட்டத்தில் இவர் இரு கோல்கள் போட்டு யுனைடெட்டை திக்குமுக்காட வைத்தார். படம்: ராய்ட்டர்ஸ்

18 Apr 2019

கலைந்த கனவுகளுடன் வெளியேறிய யுனைடெட்