ஆசிய கிண்ணம்: கோஹ்லிக்கு ஓய்வு

புதுடெல்லி: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இம்மாதம் 15=28 தேதிகளில் நடக்கவிருக்கும் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணித் தலைவரான விராத் கோஹ்லிக்கு இத்தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா அணித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். புதுமுக வீரராக ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது இடம்பெற்றுள்ளார். மொத்தம் ஆறு அணிகள் இரு பிரிவுகளாக இத்தொடரில் மோதுகின்றன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தானுடன் தகுதிச் சுற்றில் வெல்லும் அணி இடம்பெறும். இலங்கை, பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளன.

இந்தியா=பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இம்மாதம் 19ஆம் தேதி துபாயில் நடைபெறும். அணி விவரம்: ரோகித் சர்மா (அணித் தலைவர்), ‌ஷிகர் தவான் (துணைத் தலைவர்), லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மகேந்திர சிங் டோனி, தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சகல், அக்சர் பட்டேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, ஷர்துல் தாக்குர், கலீல் அகமது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விருதுகளைத் தட்டிச் சென்ற தேசிய உருட்டுப்பந்து வீரர் முகம்மது ஜாரிஸ் கோ (வலது), செயிண்ட் ஆண்ட்ரூஸ் உயர்நிலைப்பள்ளியின் ஹாக்கி அணித் தலைவர் ஷான் சீ (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Feb 2019

எஸ்டி சிறந்த விளையாட்டு வீரர் விருதுகள் வென்ற இளையர்கள்

ஆட்டம் முடியும் தறுவாயில் சிட்டியின் மூன்றாவது மற்றும் வெற்றி கோலைப் போடும் ரஹீம் ஸ்டெர்லிங் (வலது). ஸ்டெர்லிங் கின்  இந்த கோல் முயற்சியைத் தடுக்க ஷால்க கோல் காப்பாளர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
படம்: ஏஎஃப்பி

22 Feb 2019

மனந்தளராமல் போராடி வெற்றியைப் பறித்த சிட்டி