‘ஸ்டாலின் காலில் விழ வேண்டாம்’

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் காலில் யாரும் விழ வேண்டாம் என்று அக்கட்சியின் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. அவருக்கு வரவேற்பு பதாகை களையும் வைக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவரை சந்திக்க வரும் தொண்டர்கள் ஆர்வ மிகுதியால் அவர் காலில் விழ வேண்டாம்.

காலில் விழுந்து அவருக்கு மனச் சங்கடத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். காலில் விழுந்து கவனத்தைக் கவர்வது போன்ற அடிமைத் தனங்களை விட்டொழித்து அரசியலில் உயர்ந்த பண்பாடு செழித்தோங்க ஒத்துழைப்போம்,” என்று தெரி விக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் ஸ்டாலினுக்கு மாலை, சால்வை அணிவிப்பதற்குப் பதிலாக புத்தகங்களைத் தர வேண்டும்.

அந்தப் புத்தகங்கள், நூலகங்களில் வைக்கப்பட்டு பல் வேறு மாணவர்கள், பொது மக்களின் பயன்பாட்டுக்கு வழி வகுக்கப்படும். “கட்சி நிகழ்ச்சிகள் நடக்கும் போது பொதுமக்களுக்குப் போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படுத் தும் வகையில் அதிக அளவி லான பதாகைகள் வைப்பதை கைவிட வேண்டும். நிகழ்ச்சி நேரம், இடம் உள்ளிட்டவற்றை அறிய ஏதுவாக ஒரு சில பதாகைகள் போதும். ஆடம்பர பதாகைகளுக்குப் பதில் கட்சிக் கொடி மற்றும் தோரணங்கள் கட்டினால் போதும்,” என்றும் அறிக்கை தெரிவித்தது.