ஆகப்பெரிய வங்கிச் சேவையைத் தொடங்கியது இந்தியா

புதுடெல்லி: இந்தியாவில் அஞ்சல கங்கள் மூலம் வழங்கப்படும் ஆகப்பெரிய வங்கிச் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். நாடு முழுவதும் உள்ள குறிப் பிட்ட அஞ்சலகங்களில் நேற்று சேவை தொடங்கப்பட்டது. இந்தச் சேவை வரும் டிசம்பர் மாதத்துக்குள் நாடு முழுவதும் உள்ள ஒன்றரை லட்சம் அஞ்சல கங்களில் தொடங்கப்படவுள்ளது.

இதனால் மூன்று லட்சம் தபால்காரர்கள் வீட்டுக்கு அருகே வங்கிச் சேவை வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கும் வங்கிச் சேவைகள் எளிதாகவும் நேரடியாகவும் கிடைக்க ஏதுவாக அஞ்சல் நிலையங்கள் வங்கிச் சேவைகள் அளிக்கும் மையங் களாக மாற்றப்பட்டுள்ளது.

ஐபிபிபி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘Indian Post Payments Bank’ வங்கி சேவையில் மற்ற வங்கிகளைப் போல பணத்தை போட்டு வைக் கவும் எடுக்கவும் முடியும். கடனோ, கடன் அட்டையோ இந்த வங்கிச் சேவையில் இருக் காது. ஆனால் மற்ற வங்கியைப் போல பணத்தை மற்றவர்களுக்கு மாற்றவும் பொருட்களை வாங்கவும் முடியும்.

இது பற்றி விளக்கம் அளித்த தொலைத் தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா, “650 கிளை களில் 3,250 இடங்களில் ஐபிபிபி சேவை வழங்கப்படும்,” என்றார். “ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகை வங்கியில் இருந்தால் அஞ்சலக சேமிப்பு கணக்காக மாற்றப்படும்,” என்றும் அவர் சொன்னார். சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு நான்கு விழுக்காடு வட்டி வழங்கப்படும் என்றார் அவர்.