திமுகவில் மு க அழகிரி சேர்ப்பு: செப்டம்பர் 8ல் முடிவாகக்கூடும்

தமிழ்நாட்டில் இடைத்தேர்தலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலும் நடக்கவிருக்கும் சூழ லில் அரசியல் கட்சிகள் முழுமூச் சாக புதிய உத்திகளைப் பற்றி யோசிக்கத் தொடங்கியுள்ளன. மாநிலத்தின் முக்கியமான அர சியல் கட்சியான திமுக, புதிய தலைவருடன் படுசுறுசுறுப்பாக களத்தில் இறங்க ஆயத்தமாகி வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியின் மாவட்டச் செயலாளர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் களையும் சட்டமன்ற உறுப்பினர் களையும் செப்டம்பர் 8ஆம் தேதி சென்னையில் சந்தித்து முக்கிய மான அம்சங்கள் குறித்து விவாதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. திமுகவின் தலைவராக ஆகஸ்ட் 28ஆம் தேதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதற்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவே ஆகும்.

திமுகவில் மு. க. அழகிரியையும் அவருடைய ஆதரவாளர்களையும் மறுபடியும் சேர்த்துக்கொள்வது பற்றி அந்தக் கூட்டத்தில் ஆரா யப்படும் என்று தெரிகிறது. தன்னை திமுகவில் மறுபடியும் சேர்த்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தான் தயார் என்று அழகிரி அறி வித்து இருக்கிறார். இருந்தாலும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் தன்னுடைய ஆதரவாளர்களை எல்லாம் திரட்டி தனது படை பலத்தைக் காட்டப் போவதாகவும் அழகிரி சூளு ரைத்து இருக்கிறார்.

இவ்வேளை யில், திமுக தனது முக்கியமான கூட்டத்தை நடத்துகிறது. மு. கருணாநிதி (திருவாரூர்), அதிமுக சட்டமன்ற உறுப்பினர் போஸ் (திருப்பரங்குன்றம்) இரு வரும் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலும் நெருங்கி வருவதால் இவை பற்றி எல்லாம் திமுக கூட்டத்தில் விவா திக்கப்படும் என்று கட்சியினர் தெரிவித்து இருக்கிறார்கள். அழைக்கப்பட்டு இருக்கும் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செய லாளர் கே அன்பழகன் விடுத்திருக் கும் அறிக்கை கட்சியினரைக் கேட்டுக்கொண்டு இருக்கிறது. திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின் ஆற்றிய உரை கட்சி பழைய பாணியிலேயே பயணிக்கும் என்பதை உணர்த்து வதாகவே இருந்தது. நாடு முழுவதையும் காவிமய மாக்க முயலும் மோடி அரசாங்கத்தையும் ஊழல் செய்வதற்காகவே நடக்கும் அதிமுக அரசையும் அகற்றவேண்டும் என்று திரு ஸ்டாலின் குரல்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.