இசைக்கலைஞராக மாறிய தனுஷ்

இயக்குநர் வெற்றிமாறன்-, தனுஷ் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘வடசென்னை’. அண்மையில் வெளியான இதன் முன்னோட்டக் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் நாயகனாக மட்டுமல்லாமல் இசைக்கலைஞராகவும் தனது பங்களிப்பை அளித்திருப்பது தெரியவந்துள்ளது. ‘வடசென்னை’ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘வடசென்னை’ படம் தொடர்பாக அண்மைய தகவல் எதையேனும் வெளியிடுங்கள் எனப் பலரும் தம்மை நச்சரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “மிகச் சிறப்பான, பயனுள்ள விஷயங்கள் அடங்கிய இசைத் தொகுப்பை உருவாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம். இசைக்கலைஞர் தனு‌ஷின் பங்கும் இதில் சேர்ந்துள்ளது,” என சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்