ஜெயக்குமார்: கறுப்பை வெள்ளையாக்கும் தினகரன்

சென்னை: தினகரன் போன்ற காளான்கள் அவ்வப்போது முளைப்பது சகஜம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரி வித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், கருப்புப் பணத்தை வெள்ளை ஆக்கும் வகையில் தினகரன் தரப்பு ஆங் காங்கே பொதுக்கூட்டங் களை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார். “தினகரன் பகல் கனவு காண் கிறார். சொப்பனத்தில் காண் கின்ற அரிசி, சோற்றுக்கு உத வாது என்று பழமொழி உள்ளது. “கடலைத் தாண்ட ஆசை இருக்கலாம். ஆனால் அது நடக்காது. முதலில் வாய்க்காலை தாண்ட முயற்சி செய்ய வேண் டும்.

அதற்கே வக்கற்றவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்று சொல்வது உலக அதிசயம்,” என்றார் ஜெயக்குமார். இதற்கிடையே நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன், அதிமுகவில் இருப்பவர்கள் அமமுகவுக்கு வந்துவிடுவார்கள் என்று தினகரன் கூறியிருப்பது 2018ஆம் ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை என்றார். “தினகரன் கட்சியை அரசி யல் கட்சியாக மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை,” என்றும் அவர் தெரிவித்தார். அண்மையில் திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அதிமுகவில் இருப் பவர்கள் அமமுகவுக்கு வந்துவிடு வார்கள் என்றும் அப்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தனித்து விடப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார். முதல்வரின் அனைத்து நட வடிக்கைகளும் தோல்வியடையும் என்றும் தெரிவித்திருந்தார்.