எம்எல்ஏவை மணக்க இருந்த பெண் மாயம்

ஈரோடு: அதிமுக எம்எல்ஏவைத் திருமணம் செய்ய இருந்த மணப் பெண் திடீரென மாயமானது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மணப்பெண்ணை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக அவரது பெற்றோர் போலிசில் புகார் அளித்திருப்பது பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது. பவானி சாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக உள்ளார் ஈஸ்வரன். 43 வயதான இவருக்கும் கோ பி செ ட் டி ப் பா ளை ய த் தை ச் சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் அண்மையில் திருமணம் நிச்ச யிக்கப்பட்டது. இதையடுத்து வரும் 12ஆம் தேதி இவர்களது திருமணம் நடை பெற இருந்தது.

இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளைக் கவ னித்து வந்த நிலையில் மணமகள் சந்தியா திடீரென மாயமானார். கடந்த 1ஆம் தேதி சத்தியமங் கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்வதாகப் பெற்றோரிடம் கூறியுள்ளார் சந்தியா. எனினும் அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை. அத்துடன் உறவினர் வீட்டுக்கு அவர் செல்ல வில்லை என்பதும் தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த சந்தியா வின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால் காவல்துறையை அணுகினர். திருப்பூரைச் சேர்ந்த ஓர் ஆட வருக்கும் சந்தியாவுக்கும் பழக்கம் இருந்ததாகவும், அந்த நபர்தான் தங்கள் மகளைக் கடத்திச் சென் றிருக்க வேண்டும் என்றும் போலி சில் அளித்த புகார் மனுவில் சந்தி யாவின் பெற்றோர் குறிப்பிட் டுள்ளனர்.