ஃபாரஸ்ட் சிட்டியில் வெளிநாட்டினர் சொத்து வாங்க முடியும்

ஜோகூர்பாரு: ஜோகூர் மாநிலத் தின் ஃபாரஸ்ட் சிட்டி திட்டத்தில் சொத்து வாங்க வெளிநாட்டினர் வரவேற்கப்படுவதாக ஜோகூர் முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஜோகூரில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் (S$137 பில்லியன்) செலவில் உருவாக்கப் படவுள்ள ஃபாரஸ்ட் சிட்டி எனும் புதிய நகரில் வெளிநாட்டினர் சொத்து வாங்கவும் முதலீடு செய்யவும் முடியும் என்று ஜோகூர் முதலமைச்சர் ஒஸ்மான் சபியான் கூறியுள்ளார். ஃபாரஸ்ட் சிட்டி திட்டம் மலேசியர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய 30 ஆண்டு காலத் திட்டம் என்று அவர் குறிப்பிட்டார். அத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் வெளிநாட்டினருக்கு விற்கப்படாது என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது சென்ற வாரம் அறிவித் திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அத்திட்டம் குறித்து திரு ஒஸ்மான் விளக்கம் அளித்துள்ளார். இவரது கருத்து திரு மகாதீர் அறிவித்திருந்ததற்கு முரண்பட்ட ஒன்றாகத் தெரிகிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களைப் பாதுகாக்க மலேசியா விரிவான சட்டங்களைப் பெற்றிருப்பதாக ஜோகூர் அரசாங்கம் நம்புவ தாகவும் திரு ஒஸ்மான் கூறினார். மலேசியாவில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ள முடியும் என்று ஜோகூர் அரசு நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஃபாரஸ்ட் சிட்டியை சீனாவைச் சேர்ந்த கன்ட்ரி கார்டன் நிறுவனம் உருவாக்கவுள்ளது. இந் நகரில் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளில் மூன்றில் இரண்டு பங்கு வீடுகள் சீனாவைச் சேர்ந்த வர்களுக்கு விற்கப்படவுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இதுவரை மன்னார் கல்லறைப் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வுப் பணியின்போது கிடைக்கப்பெற்ற 300க்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகளில் 23 எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையது என்று அகழ்வுப் பணிக்கு பொறுப்பு வகிக்கும் டாக்டர் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். படம்: ஊடகம்

17 Jan 2019

மன்னாரில் 300 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே (இடமிருந்து மூன்றாவது) முன்வைத்த பிரெக்சிட் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஏற்க மறுத்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

17 Jan 2019

சூடுபிடிக்கும் பிரெக்சிட் விவகாரம்