சூழலியல் ஆர்வலர்கள்: கனிமவளக் கொள்கை மாற்றத்தால் ஆபத்து

சென்னை: தமிழகத்துக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் மத்திய அரசு கனிமவளக் கொள்கைகளில் தொடர்ந்து மாற்றம் செய்து வருவ தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ் ணன் தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தி வரும் தமிழக அரசு தமிழகத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப் பதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஒரு மாத காலத்தில் தேசிய துரப்பணக் கொள்கையில் சில மாற்றங்களைச் செய்துள்ளது மத்திய அரசு.

இதையடுத்து தமிழகத்தில் மீத்தேன், ஷேல் காஸ் திட்டங் களைச் செயல்படுத்த மத்திய அரசு மறைமுகமாக முயற்சி மேற் கொண்டுள்ளதாக சூழலியல் ஆர் வலர்கள் புகார் எழுப்பியுள்ளனர். தனியார் நிறுவனங்களைக் கவர்ந்திழுக்க, திறந்த வெளி அனுமதி என்ற கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ள மத்திய அரசு, முதல் சுற்றில் தமிழகத்தின் 3 வட்டாரங்கள் உள்ளிட்ட 55 புதிய வட்டாரங்களில் அனைத்து விதமான எரிபொருளையும் எடுப்ப தற்கான பணிக்கு ஒப்பந்தப் புள்ளியைக் கோரியது. “எரிவாயு எடுப்பதற்காக மத் திய அரசு அடையாளம் கண்டுள்ள 55 வட்டாரங்களில் மூன்று தமிழகத்தில் உள்ளன.

இதில் இரண்டுக்கான உரிமம் வேதாந்தா நிறுவனத்திடமும் மற்றொரு உரி மம் ஓஎன்ஜிசியிடமும் உள்ளது. கொள்கைகள் மாற்றப்பட்டுவிட்ட தால், தூத்துக்குடியில் எதைச் செய்ததோ அதைத்தான் வேதாந்தா போன்ற நிறுவனங்கள் மீண்டும் செய்யும்,” என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.