திமுக ஆட்சியில் ரூ.82,000 கோடி மணல் கொள்ளை

காரைக்குடி: திமுகவின் ஒட்டுமொத்த மோசடி உருவத்தை மக்கள் முன் பாரதிய ஜனதா தோலு ரித்துக் காட்டும் என அக்கட்சியின் தேசியச் செயலர் எச். ராஜா தெரிவித்துள்ளார். கடந்த கால திமுக ஆட்சியில் மட்டும் 82 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மணல் கொள்ளை நடந்திருப்பதாக காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குற்றம் சாட்டினார். “முக்கொம்பில் 10 மதகுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதற்கு காரணம் தொடர்ச்சியாக நடந்த மணல் கொள்ளைதான். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் 12 முதல் 15 அடி வரை மணல் தோண்டியுள்ளனர். “ஆனால் அனைத் துக்கும் தற்போதைய அரசு மட்டுமே காரணம் என்பதைப் போல ஸ்டாலின் பேசி வருகிறார்,” என்றார் ராஜா. மு.க. ஸ்டாலின் தலைமைப் பண்புக்குத் தகுதியற்றவர் என்று குறிப்பிட்ட அவர், திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் தமிழகத்தின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் கட்சிகள் என்றார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தென்கொரியாவில் பிரதமர் மோடிக்கு ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. படம்: இபிஏ

22 Feb 2019

‘வாய்ப்புகள் நிறைந்த நாடு இந்தியா’