ஜப்பானைத் தாக்கிய சூறாவளிக்கு 10 பேர் பலி

தோக்கியோ: மேற்கு ஜப்பானை சக்திவாய்ந்த சூறாவளி சுழற்றிப் போட்டதில் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விமான நிலையமும் வெள்ளத் தில் மிதந்ததால் 3,000க்கும் மேற் பட்ட பயணிகள் செய்வதறியாது தவித்தனர். அவர்கள் உடனடியாக படகு கள் மூலம் பாதுகாப்பான இடத் துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று நேற்று அரசு தெரிவித்தது. ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட வீடுகளில் மின்சாரமும் துண்டிக்கப் பட்டது.

கொரிய மொழியில் ‘ஜெபி’ அல்லது ‘ஸ்வால்லோ’ என்று சூறாவளி அழைக்கப்படுகிறது. பலமாதம் நீடித்த கனமழை, இதனால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றுக்கு நூற்றுக் கணக்கானவர்கள் பலியாகியுள் ளனர். இந்த நிலையில் ஜப்பான் வரலாற்றில் 25 ஆண்டுகள் இல்லாத சக்திவாய்ந்த சூறாவளி நேற்று மேற்கு ஜப்பானைத் தாக் கியது. இதையடுத்து மேற்கு ஜப்பானில் உள்ள கன்சாய் விமான நிலையத் தில் 3,000க்கும் மேற்பட்ட பய ணிகள் பயணம் செய்ய முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

ஜப்பானைத் தாக்கிய சூறாவளியின் கைவரிசை இது. கார்களையெல்லாம் சுழற்றிப்போட்டு குவியலாக அது குவித்தது. படம்: ஈபிஏ