காட்சிகள், பாத்திரங்கள் உருவான விதம் பற்றி பாக்யராஜ்

தனது படங்களுக்கான நகைச் சுவை கதாபாத்திரங்களை உரு வாக்கியது எப்படி என இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். ‘கூத்தன்’ என்ற பெயரில் உருவாகியுள்ள புதுப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அவர் தனது அனுபவங்களை விவரித்தபோது அரங்கில் சிரிப்பலை படர்ந்தது. “நடிகர்களைக் கூத்தாடிகள் என்று சொல்வது உண்டு. அதையே இந்தப் படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளனர்.

“நகைச்சுவை உட்பட எனது படத்தில் இடம்பெறும் காட்சிகள் எனக்கு அவ்வப்போது தோன்றும். ‘மவுன கீதம்’ படத்தில் சரிதா குளித்து விட்டு வந்து, பின்னால் ஊக்கு மாட்டிவிட சொல்லும் காட்சி தனக்கு பிடித்து இருந்த தாக இந்தப் படத்தின் தயாரிப் பாளர் சொன்னார்.

“தென்னை மரம் நான்கு வருடத்தில் பலன் தரும், பனை மரத்துக்கு 18 ஆண்டுகள் ஆகும் என்று எனது கார் ஓட்டுநர் ஒரு முறை சொன்னார். அதை மனதிற் கொண்டு ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கினேன். “ஒரு அப்பா அவரது மகனை எப்போதும் திட்டுவார். அந்தப் பையன் அப்பாவிடம் தென்னை விதைத்து இருந்தால் மூன்று நாலு மாதத்தில் பலன் கொடுக் கும். நீ விதைத்தது பனை என்பான். இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. “நாடக நடிகைகள் பின்னால் சுற்றும் ஊர்ப் பெரியவர்களை மனதில் வைத்து ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் கல்லாப் பெட்டி சிங்காரம் கதாபாத்திரத்தை உருவாக்கினேன்,” என்றார் பாக்யராஜ். ‘கூத்தன்’ படத்தில் நாயக னாக ராஜ்குமார், நாயகிகளாக ஸ்ரிஜிதா, சோனல் ஆகியோர் நடித்துள்ளனர். வெங்கி இயக்கி உள்ள இந்தப் படம் விரைவில் திரை காண இருப்பதாக படக்குழுவினர் தெரி வித்துள்ளனர்.

‘கூத்தன்’ படத்தில் இடம்பெறும் காட்சியில் ராஜ்குமார், சோனல்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்