இந்தியாவில் தீர்ப்பு: ஓரினச் சேர்க்கை சட்டப்படி செல்லும்

புதுடெல்லி: இந்தியாவில் ஓரினச் சேர்க்கை தடையல்ல என்று நேற்று அந்த நாட்டின் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. அத்தகைய சேர்க்கையைத் தடைசெய்கின்ற சட்டப் பிரிவை நீதிமன்றம் ரத்துசெய்துவிட்டது. அந்த நாட்டு தண்டனைச் சட்டத் தின் 377வது பிரிவு, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை ஒரு குற்றம் என்று குறிப்பிட்டது. பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் கூடின பட்சமாக ஆயுள்தண்டனையும் விதிக்க வகைசெய்யும் அந்தச் சட்டப் பிரிவை எதிர்த்து பல தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். இந்த வழக்கை விசாரித்து நேற்று வரலாற்று முக்கிய தீர்ப் பளித்த நீதிபதி தீபக் மிஸ்ரா, “ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும். யாரும் தங்கள் தனித்துவத்தில் இருந்து தப்பிக்கமுடியாது,” என்று தெரிவித்தார். ஓரினச் சேர்க்கைக்குத் தடை விதித்து 2013ல் நீதிமன்றம் பிறப் பித்த உத்தரவை இப்போது உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.

இந்தியாவில் காலனித்துவ காலத்திலிருந்து ஓரினச் சேர்க் கைக்குத் தடைவிதிக்கும் சட்டம் நடப்பில் இருந்து வந்துள்ளது. அத்தகைய சேர்க்கையில் ஈடு படுவதை இயற்கைக்கு மாறான ஒரு குற்றம் என்று அந்தச் சட்டம் இதுநாள் வரை கூறிவந்தது. இப்போது உச்சநீதிமன்றம் அந்தச் சட்டத்தைத் தள்ளுபடி செய்து புதிய வரலாறு படைத் திருப்பதாக ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் தெரிவித்தனர். ஓரினச் சேர்க்கையில் ஈடுபடு வதைச் சட்ட விரோதமானதாக கருதக்கூடாது என்று இந்தியா வின் பெரும் நகரங்களில் பொது வான கருத்து நிலவி வந்தாலும் சமய அமைப்புகளும் பழமை மாறாமல் இருந்து வருகின்ற கிராமப்புற சமூகங்களும் அத்த கைய சேர்க்கையைச் சட்டவிரோத மானதாகவே கருதவேண்டும் என்று இதுநாள் வரை போராடி வந்தன. உச்ச நீதிமன்றம் இப்போது திட்டவட்டமாகத் தீர்ப்பளித்து விட்டதால் இனிமேல் இந்தத் தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல் முறையீடு செய்யமுடியாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.