கனரக வாகனத்திடம் சிக்கிய கார்

உட்லண்ட்ஸை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 2.50 மணியளவில் ஒரு கனரக வாகனமும் கறுப்பு நிற கார் ஒன்றும் விபத்தில் சிக்கின. சாலையின் நடு தடத்தில் சென்று கொண்டிருந்த கனரக வாகனத்தை முந்திக்கொண்டு இடது தடத்திலிருந்து வந்த கார் இடைவெளியைச் சரியாகக் கணிக்காமல் வந்ததால் கனரக வாகனத்தால் மோதப்பட்டது. இச்சம்பவம் கனரக வாகனத்தில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகியுள்ளது. மோதலின் தாக்கத்தால் காரின் வலது பகுதி சேதமடைந்ததுடன் அது வளைந்து சென்று போக்குவரத்தை நோக்கியவாறு நின்றது. விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரி விக்கப்பட்டது.