கைதாவதை எதிர்த்த ஆடவர் சிறை

வரி செலுத்தாத சிகரெட்டுகளை வைத்திருந்ததன் தொடர்பில் சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைதாவதை எதிர்த்த 23 வயது ஹிஸ்மான் பின் அம்ரான் என்பவருக்கு இரு வாரச் சிறைத் தண்டனையும் வீட்டில் வரி செலுத்தாத சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக $1,000 அபராதமும் விதிக்கப்பட்டன.

மே 12ம் தேதி மாலையில் பொங்கோல் வாக் இடத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் ஹிஸ்மான் ஹிஸ்மானை விசாரித்தபோது ஓர் அதிகாரியைத் தள்ளியதில் அவர் கீழே விழுந்தார். பின், கைது செய்யப்படுவதைக் கடுமையாக எதிர்த்ததோடு அதிகாரிகளை நோக்கித் தகாத சொற்களையும் ஹிஸ்மான் கூறினார். ஹிஸ்மானின் பையில் ஒரு பொட்டலம் வரி செலுத்தாத சிகரெட்டுகள் இருந்ததோடு அவருடைய வீட்டிலும் ஆறு பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.