உயிரைப் பறிக்கும் கனரக வாகன விபத்துகள் குறைந்தன

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கனரக வாகனங் களால் ஏற்படும் உயிர் கொல்லி விபத்துகள் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 50 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதி யில் கனரக வாகனங்களால் 10 உயிர் கொல்லி விபத்துகள் ஏற்பட்டன.

இவ்வாண்டின் முதல் பாதியில் கனரக வாகனங்களால் காயமடைந் தோரின் எண்ணிக்கையும் 377லிருந்து 361க்கு குறைந்து உள்ளது. இருப்பினும், கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்து கள் குறித்து போலிசார் அக்கறை தெரிவித்துள்ளனர். கனரக வாகனங்கள் பெரிதாக இருப்பதால் அவை விபத்துக் குள்ளாகும்போது மரணம் விளை விக்கும் ஆபத்து கூடுதலாக உள்ளது என்று போக்குவரத்து போலிஸ் படையின் ரோந்துப் பிரிவுத் துணைத் தலைமை அதிகாரி ஜான் சான் தெரிவித்தார்.

சாலை விதிகளை மீறும் கனரக வாகன ஓட்டுநர்களைப் பிடிக்கத் தீவு முழுவதும் போக்குவரத்து போலிஸ் படை நடத்திய சோதனை நடவடிக்கை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்