நாடாளுமன்றமே இறுதி முடிவெடுக்க வேண்டும்

குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 377ஏ=வை ரத்துச் செய்வதா அதில் மாற்றம் செய்வதா என்பதை நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரி- வித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் முதன்முறையாக கருத்துரைத்ததை அடுத்து இத னைத் தெரிவித்தார். சட்ட வடிவைப் பொறுத்து, நாடாளுமன்றத்தில் பொதுக்- கொள்கை வகுப்பதில் பொது மக்களின் அபிப்பிராயத்தைப் பெறு- வது பொருத்தமாக இருக் கும் என்று அவர் கூறினார். குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 377ஏ படி தற்போது ஓரினச் சேர்க்கை குற்றமாகிறது. ஓரினச் சேர்க்கை குற்றமாகாது என்று இந்தியாவின் உச்ச நீதி- மன்றம் கடந்த வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

சட்டப் பிரிவு 377ஏ, அரசியல் நிர்ணய சட்டப்படி செல்லுமா செல்- லாத என்பதுதான் பிரச்சினை. அது மக்களின் அபிப்பிராயத்- திற்கு உட்பட்ட ஒன்றல்ல என்ற இந்திய உச்ச நீதிமன்றத்தின் அறிக்கை குறித்து திரு சண்முகம் கருத்து ரைத்தார். உள்துறை அமைச்சின் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து- கொண்ட அவர் செய்தியாளர் களிடம் பேசினார். “இந்த அணுகுமுறையைதான் சிங்கப்பூர் உட்பட உலக நாடுகளில் உள்ள பல நீதிமன்றங்கள் பின் பற்று கின்றன. “அது பெரும்பான்மையினரின் கருத்தாக இருக்கட்டும் அல்லது சிறுபான்மையினரின் கருத்தாக இருக்கட்டும். பொதுமக்கள் என்ன நினைக்கின்றனர் என்பது பொதுவாக கருத்தில் கொள்ளப்படு- வதில்லை. சட்டத்தை அரசியல் சாசனத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்,” என்று திரு சண்முகம் விவரித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான மறுவாழ்வு மற்றும் சமுதாய மறுஒருங்கிணைப்புத் திட்டங்களில் பங்காற்றிய தொண்டூழியர்களுக்கு நன்றிக்கூறும் நிகழ்ச்சி ஒன்றை உள்துறை அமைச்சு நேற்று ஏற்று நடத்தியது. அதில் கலந்துகொண்ட சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்