அவசர மருத்துவ வாகனம்=-கார் மோதல்: காயமடைந்த நால்வர் மருத்துவமனையில்

நியூ பிரிட்ஜ் ரோட்டில் நேற்று முன்- தினம் மாலை அவசர மருத் துவ வாகனத்திற்கும் காருக்கும் இடை யே விபத்து ஒன்று நிகழ்ந்தது. அந்த மருத்துவ வாகனத்தில் இருந்த 69 வயது மதிக்கத்தக்க நோயாளி ஒருவரும் மூன்று மருத்- துவ உதவியாளர்களும் இதில் காயமடைந்ததில் மருத்துவ- மனைக்கு கொண்டுசெல்லப்பட் டனர்.

ஸ்டோம்ப் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்- படங் களில், விபத்துக்குள்ளான அந்த அவசர மருத்துவ வாக- னத்தின் முன் பகுதி சேதமடைந்தது காட்டப்பட்டது. அந்த வாகனத்தின் முன் பகுதியை ஒட்டி விபத்துக்- குள்ளான அந்த கார் ஏறி நின்றது. இந்த விபத்து இரவு 7 மணிக்கு நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரி வித்தது.

இதில் காயமடைந்த நோயாளி, அவசர மருத்துவ வாகன ஓட்டுநர், இரு மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் மூன்று அவசர மருத்- துவ வாகனங்களில் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இந்த விபத்தில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் காயம் எதுவும் ஏற்பட- வில்லை என்றும் அவர் மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப்பட மறுத்துவிட்டார் என்றும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

விபத்துக்குள்ளான அந்த அவ- சர மருத்துவ வாகனம், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு நோயாளி ஒருவரைக் கொண்டு சென்றுகொண்டிருந்தது. அந்த வாகனத்தின் மேல் இருந்த விளக்குகள் விட்டு விட்டு எரிந்து கொண்டு வாகனம் அவசர கதியில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக் கப்பட்டது. இருப்பினும், இந்த விபத்து ஏற்படுவதற்கு யார் காரணம் என்ற விவரங்கள் தெரிவிக்கப்பட வில்லை. காயமடைந்த அந்த நால்வர் 23க்கும் 69 வயதுக்கும் இடைப்- பட்டவர்கள் என போலிஸ் கூறி யது. இந்த விபத்து குறித்த போலிஸ் விசாரணை தொடர்கிறது. 2

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோப்புப்படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Jul 2019

மின்ஸ்கூட்டர் ஓட்டிகள் விதி மீறுவதை தடுக்க நடவடிக்கை

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திற்கும் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடமைச் சங்கத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிண்டாவின் தலைவரும்  கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி  இந்திராணி ராஜாவின் முன்னிலையில் கையெழுத்தானது.

20 Jul 2019

இந்திய சமுதாய மேம்பாட்டுக்கு சிண்டா, லி‌‌‌ஷா அமைப்புகளுக்கிடையே ஒப்பந்தம்