ஒரு கப் ஐஸ் மைலோ விலை 3.20 ரிங்கிட்; உணவக முதலாளிக்கு 30,000 ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர்: ஒரு கப் ஐஸ் மைலோ 3.20 ரிங்கிட் (S$1.06) விலையில் விற்பனை செய்த உணவக உரிமையாளர் ஒருவர் 30,000 ரிங்கிட் (S$9,963) அபராதம் செலுத்த நேர்ந்தது. அந்த விலை அநியாய விலையாகக் கருதப்பட்டதால் உணவக உரிமையாளரான சீஹான் முகமட் சலீம் மீது குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு 30,000 ரிங்கிட் அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப் பட்டதாக நீதிமன்றத் தகவல்கள் கூறின.

கோத்தா கினபாலுவில் உள்ள ‘அனக் மாமி’ எனும் உணவகத்தின் உரிமையாளரான சீஹான், முழு விலை விவரங்களையும் குளிர் பானங்களுக்கான ரசீதுகளையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக் கத் தவறியதற்காக அவர் மீது விலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தக் குற்றங்களைச் செய்ததாகவும் அவர் மீது மேலும் ஒரு குற்றச் சாட்டு சுமத்தப்பட்டிருந்ததாகவும் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.