ஃபாண்டி: பயமில்லை என நிரூபித்துள்ளோம்

நட்புமுறை காற்பந்து ஆட்டத்தில் மொரீ‌ஷியஸ் குழுவுடன் 1=1 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் சமநிலை கண்டது. இந்த ஆட்டம் பீஷான் விளையாட்டரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் மொரீ‌ஷியஸ் கோல் போட்டு விளையாட்டரங்கத்தில் கூடி இருந்த ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இடைவேளையின்போது 1=0 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் பின்தங்கியிருந்தது. பிற்பாதியில் அனுபவமிக்க வீரர்களான ஷாரில் இஷாக், கைரூல் அம்ரி, பைஹாக்கி கைஸான் ஆகியோரைக் களமிறக்கினார் சிங்கப்பூர் குழுவின் இடைக்காலப் பயிற்று விப்பாளர் ஃபாண்டி அகமது. இது ஆட்டத்தின் போக்கை மாற்றி அமைத்தது.

ஆட்டம் முடிய 16 நிமிடங்கள் இருந்த போது ஷாரில் இஷாக் கொடுத்த பந்தை வலைக்குள் சேர்த்தார் ஃபாண்டியின் மகனான இக்சான் ஃபாண்டி. இதுவே இக்சானின் முதல் அனைத்துலக ஆட்ட கோலாகும். “பயிற்சிகளின்போது தங்க ளுடைய திறமையைக் காட்ட இளம் வீரர்கள் சற்று தயங்கினர். ஆனால் மொரீ‌ஷியஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் எதிரணி யைக் கண்டு பயப்படவில்லை என்பதை அவர்கள் நிரூபித் துள்ளனர். எங்களது ஆட்டக் காரர்கள் நன்றாக விளை யாடினர். ஆட்டத்தின்போது விட்டுக்கொடுக்காமல் போட்டி யிட்டனர்,” என்று ஃபாண்டி பெருமிதத்துடன் கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பயிற்சிக்காக ஜேடபிள்யூ மரியாட் ஹோட்டலைவிட்டு வெளியேறும் இத்தாலியின் இன்டர் மிலான் காற்பந்துக் குழு ஆட்டக்காரர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Jul 2019

சிங்கப்பூர் வந்தது இன்டர் மிலான் குழு