பெல்ஜியம் கோல் மழை; சரணடைந்த ஸ்காட்லாந்து

கிளாஸ்கோ: அனைத்துலக நட்புமுறை காற்பந்துப் போட்டியில் பெல்ஜியம் 4=0 எனும் கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை நேற்று பந்தாடியது. அண்மையில் நடந்து முடிந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த பெல்ஜியத்தின் அதிரடித் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஸ்காட்லாந்து திக்கு முக்காடியது. ஆட்டத்தின் 28வது நிமிடத் திலேயே ஸ்காட்லாந்தின் தற் காப்பில் நேர்ந்த குளறுபடியைப் பயன்படுத்தி பெல்ஜியத்தின் முதல் கோலைப் போட்டார் ரொமேலு லுக்காகு. இடைவேளையின்போது 1=0 எனும் கோல் கணக்கில் பெல்ஜியம் முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டம் தொடங்கி சில வினாடிகளிலேயே பெல் ஜியத்தின் இரண்டாவது கோல் புகுந்தது.

ஈடன் ஹசார்ட் வலை நோக்கி அனுப்பிய பந்து வலையைத் தீண்டியது. அதனைத் தொடர்ந்து 52வது, 60வது நிமிடங்களில் மிச்சி பாட்சுவாயி இரண்டு கோல்களைப் போட்டு ஸ்காட்லாந்து பதிலடி கொடுக்க முடியாதபடி பார்த்துக்கொண்டார். நேஷன்ஸ் லீக் நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் ரஷ்யா 2=1 எனும் கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று நடைபெற்றது.

பந்தை வலைக்குள் சேர்க்கும் பெல்ஜியத்தின் நட்சத்திர வீரர் ஈடன் ஹசார்ட் (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் வீரர் ஃபெர்னான்டோ லோரெண்டே (இடமிருந்து மூன்றாவது) போட்ட கோல் சிட்டியின் அரையிறுதி கனவைத் தவிடுபொடியாக்கியது. படம்: ஏஎஃப்பி

19 Apr 2019

கார்டியோலா: கொடுமையான தோல்வி