மனைவியை பலாத்காரம் செய்வதும் குற்றமாகிறது

மனைவியின் சம்மதமின்றி அவ ருடன் பாலியல் உறவு கொள்ளும் கணவன்மார்கள், பாலியல் பலாத் காரக் குற்றச்சாட்டிலிருந்து விதி விலக்கு பெறக்கூடாதென குற்ற வியல் தண்டனைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யும் குழு பரிந்துரைக்கிறது. உள்துறை அமைச்சும் சட்ட அமைச்சும் 2016ல் அமைத்த இந்தக் குழு, திருமணமான அல் லது திருமணமாகாத எல்லா பெண்களுக்கும் பாலியல் பலாத் காரத்திலிருந்து பாதுகாப்பளிப் பதை நோக்கமாகக் கொண்டு, பாலியல் பலாத்காரத்திற்கு அளிக் கப்படும் திருமண விதிவிலக்கு முழுமையாக, நிபந்தனைகளின்றி நீக்கப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

ஒரு கணவன் தனது மனைவியைப் பாலியல் பலாத்காரம் செய்யக்கூடும் என்பதை 2007 வரை சிங்கப்பூர் ஏற்கவில்லை. அந்த ஆண்டு, குறிப்பிட்ட சில சூழ்நிலைகளின்கீழ் இத்தகைய பாலியல் பலாத்காரத்தைக் குற்ற மாகக் கருதும் வகையில் சட் டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இடைக்கால விவாகரத்து தீர்ப்பின்கீழ் அல்லது எழுத்துபூர்வ பிரிவினை ஒப்பந்தத்தின்கீழ் கணவனும் மனைவியும் தனித் தனியாக வாழும் சூழ்நிலை, விவாகரத்து வழக்கு தொடங்கி விட்ட சூழ்நிலை அல்லது மனைவி கணவருக்கு எதிராகப் பாதுகாப்பு ஆணை பெற நட வடிக்கை எடுத்திருக்கும் அல்லது ஆணையைப் பெற்றுவிட்ட சூழ் நிலை ஆகியன இதற்கான எடுத்துக்காட்டுகள்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோப்புப்படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Jul 2019

மின்ஸ்கூட்டர் ஓட்டிகள் விதி மீறுவதை தடுக்க நடவடிக்கை

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திற்கும் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடமைச் சங்கத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிண்டாவின் தலைவரும்  கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி  இந்திராணி ராஜாவின் முன்னிலையில் கையெழுத்தானது.

20 Jul 2019

இந்திய சமுதாய மேம்பாட்டுக்கு சிண்டா, லி‌‌‌ஷா அமைப்புகளுக்கிடையே ஒப்பந்தம்