$39 மி. பணத்தைத் திருப்பிக் கேட்கும் நஜிப்

பெட்டாலிங் ஜெயா: மலேசிய போலிசார் தம்மிடமிருந்து கடந்த மே மாதம் பறிமுதல் செய்த 116.7 மில்லியன் ரிங்கிட் ($39 மில்லியன்) பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக். பறிமுதல் செய்யப் பட்டுள்ள பணம் தொடர்பாகக் கடந்த மூன்று மாதங்களில் எவ்விதச் சட்டரீதியிலான நடவ டிக்கையும் எடுக்கப்படாததால் அப் பணத்தைத் தம்மிடம் போலிசார் ஒப்படைக்கவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத் தில் பெரும்பாலான பகுதி அம்னோ கட்சிக்குச் சொந்தமானது என்று திரு நஜிப் கூறுகிறார். கடந்த மே மாதத்தில் நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி தோல்வியைத் தழுவி யது. அப்போது அம்னோவின் தலைவராக திரு நஜிப் பதவி வகித்தார். தேர்தலில் தோற்றதும் அம்னோ தலைவர் பதவியிலிருந்து அவர் பதவி விலகினார்.