இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு

மும்பை: இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றும் கடுமையான சரிவை சந்தித்தது. வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி வர்த்தக நேர இறுதியில் டாலருக்கு நிகராக 71.73 ஆக இருந்த ரூபாய் மதிப்பு நேற்று காலை வர்த்தக நேர தொடக்கத்தின்போது 45 காசுகள் சரிந்து 72.15 ஆக இருந்தது. சிறிது நேரத்தில் மேலும் சரிந்து 72.18 என்ற புதிய உச்சகட்ட சரிவு நிலையை எட்டியுள்ளது. இதற்கு முன் செப்டம்பர் 6ஆம் தேதி 72.11 என்ற அளவிற்குச் சரிந்ததே உச்சபட்ச சரிவாக கருதப்பட்டது.