நீரிழிவுக்கு இட்டுச்செல்லக்கூடிய அபாய நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கென ஆரோக்கிய உணவைக் கண்டறியும் புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது.
இங் டெங் ஃபோங் மருத்துவ மனையும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவு நிபுணர்களும் இணைந்து இச்செயலியை உரு வாக்கியுள்ளனர்.
'ஜூரோங்ஹெல்த் ஃபுட் லொக்' (JHFoodLg) எனப்படும் இச்சயலி செயற்கை நுண் அறிவைப் பயன்படுத்துகிறது.
நீரிழிவு ஏற்படக்கூடிய நோ யாளிகள் தங்களின் உணவைக் கைபேசிவழி படம்பிடித்து இந்தச் செயலியில் பதிவேற்றம் செய்வர்.
செயலியின் தரவுத்தளத்தில் ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப் பட்ட 'நாசி பாடாங்', 'லக்சா' என 200க்கும் மேற்பட்ட பிரபலமான உணவுவகைகள் தொடர்பான தகவல்கள் இருக்கும்.
நோயாளி பதிவேற்றம் செய்த படத்திலுள்ள உணவை உடனே செயலி தரவுத்தளத்தில் உள்ள உணவுவகைகளுடன் இணைத்து அதன் ஊட்டச்சத்து தொடர்பான தகவல்களைக் காட்டும்.
இத்தகவல்கள் சுகாதார மேம்பாட்டு வாரியம், ஜூரோங்ஹெல்த் வளாகம், ஆஸ்திரேலிய உணவு மற்றும் ஊட்டச்சத்து தரவுத்தளம் ஆகிய வற்றிலிருந்து பெறப்படும்.
தரவுத்தளத்தில் இல்லாத ஓர் உணவுவகை பதிவேற்றம் செய்யப் பட்டால், அதைப் பற்றி தகவல் திரட்டி வைத்துக்கொள்ளும் ஆற்றலும் செயலிக்கு உண்டு.
ஆரோக்கிய உணவைக் கண்டறிவதற்கான புதிய செயலி
25 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Jan 2019 08:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!