சினிமா படப்பிடிப்பில் எப்படி இருக்கின்றேனோ அதேபோல்தான் வீட்டிலும் துறுதுறுவென்று இருப் பேன். எனக்கு சும்மாவே ஓரிடத்தில் முடங்கி இருக்கப் பிடிக்காது.
ஏதாவது ஒரு வேலையில் என்னை எப்போதும் ஈடுபடுத்திக்கொண்டு பரபரப்பாகவே இருப்பேன் என்று கூறியுள்ளார் நிக்கி கல்ராணி.
"என் வீட்டில் ஒரு நாய்க் குட்டியை வளர்த்து வருகிறேன். அதனுடன் விளையாடுவதுதான் என் முக்கிய பொழுதுபோக்கு. அது மன உளைச்சலைப் பெரிதும் போக்க உதவுகிறது.
"இதுதவிர சமையலிலும் எனக்கு ஆர்வம் அதிகம். நண்பர்கள் வீட்டுக்கு வந்தால், அவர் களுடன் சேர்ந்து சமைப்பேன்.
"பொங்கல் திருநாளின்போது வீட்டில் வெண்பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும் என் கையால் செய்து அனைவருக்கும் பரிமாறி னேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டில் இருக்கவே அதிகம் விரும்புவேன்.
"சார்லி சாப்ளின் 2' படத்தில் ஒப்பந்தமானதும் முதல் வேலை யாக 'சார்லி சாப்ளின்' முதல் பாகத்தைப் பார்த்தேன். சிறந்த வெற்றி பெற்ற இந்தப் படம் ஆறு மொழிகளில் மறுபதிப்பு செய்யப் பட்டதாகவும் அறிந்தேன். இப் போது எடுக்கப்படும் 'சார்லி சாப்ளின் 2' படம் 'சார்லி சாப்ளின்' படத்தின் தொடர்ச்சி அல்ல. இது முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டது.
"குடும்பத்தினரோடு அனை வரும் வந்து படத்தைப் பார்த்து ரசித்துச் சிரிக்கலாம்," என்று கூறி யுள்ளார் நிக்கி கல்ராணி.
‘நான் வளர்க்கும் நாய்க்குட்டி என் மன உளைச்சலைக் குறைக்கிறது’
25 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Jan 2019 09:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!