நியூகாசல்: பிரிமியர் லீக் தரவரிசையில் லிவர்பூல் அணிக்கு உள்ள முன்னிலையைக் குறைக்கும் நோக்கத்துடன் நேற்று அதிகாலை நியூகாசல் குழுவுடன் மோதிய மான்செஸ்டர் சிட்டிக்கு அதிர்ச்சியே மிஞ்சியது.
ஆட்டம் தொடங்கிய 24 வினாடிகளிலேயே முதல் கோலை போட்டு அசத்திய மான்செஸ்டர் சிட்டியை பின்னர் தனது காற் பந்தாட்டத்தால் அடக்கி ஆண்டது நியூகாசல் குழு.
அந்த ஒரு கோலை தொடர்ந்து மான்செஸ்டர் சிட்டி குழுவால் நியூகாசல் குழுவின் கோல் காப்பாளருக்கு எவ்வித நெருக்கு தலையும் சிட்டி வீரர்களால் கொடுக்க முடியவில்லை.
இதைத் தங்களுக்குச் சாதக மாகப் பயன்படுத்திக்கொண்ட நியூகாசல் வீரர்கள் மெல்ல மெல்ல மிகுந்த தன்னம்பிக்கையுடன் விளையாடத் தொடங்கினர்.
அதற்குரிய பலனையும் அவர் கள் பெற்றனர். ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் நியூகாசலின் சாலமோன் ரோண்டோன் சக வீரரான ஐசெக் ஹேய்டன் என்பவரிடமிருந்து கிடைத்த பந்தை சிட்டி கோல் வலையை நோக்கி உதைக்க, சிட்டி கோல் காப்பாளரால் அதைத் தடுக்க முடிய வில்லை.
நியூகாசல் குழு போட்ட இந்த கோலால் அரங்கமே அதிர்ந்தது. நியூகாசலின் சொந்த மைதானத் தில் நடந்த ஆட்டம் என்பதால் அந்தக் குழு ஆதரவாளர்கள் இடையே மகிழ்ச்சி ஆரவாரம் கரைபுரண்டோடியது.
இதைத் தொடர்ந்து மேலும் சுறுசுறுப்படைந்த நியூகாசல் சிட்டி கோல் வலையை நோக்கி முன் னேறித் தாக்குவதை அதிகப்படுத் தியது. ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் நியூகாசல் வீரரான சோன் லோங்ஸ்டாஃப் என்பவரை கோல் எல்லைக்குள் கீழே தள்ள நியூகா சல் குழு தனக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக் கியது.
இந்தப் காற்பந்துப் பருவத்தில் இதுவரை மான்செஸ்டர் சிட்டி விட்டுக்கொடுத்துள்ள புள்ளி களின் எண்ணிக்கை சென்ற காற்பந்து பருவத்தில் அது விட்டுக்கொடுத்த புள்ளிகளை விட அதிகம் என்று பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.
மேன்சிட்டியை அடக்கிய நியூகாசல்
31 Jan 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Jan 2019 09:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!