மணிலா: தாம் இறந்துவிட்டதாகப் பரவி வந்த புரளிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஃபேஸ்புக்கில் நேரலையாக நேற்று முன்தினம் தோன்றினார் பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே.
"நான் மரணமடைந்துவிட்டதாக பரவி வரும் புரளியைக் கேட்டு அதை நம்புபவர்கள் எனது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்று நேரலைக் காணொளியில் தோன்றிய அதிபர் டுட்டர்டே நையாண்டியாகக் கூறி னார்.
அதிபர் டுட்டர்டேயின் இந்தக் காணொளியை பிலிப்பீன்சின் ஊடகங்கள் டுவிட்டர் மூலம் பகிர்ந்துகொண்டன.
அதிபர் டுட்டர்டேயும் அவரது துணைவியார் திருவாட்டி ஹனி லட் அவன்செனாவும் ஒன்றாக அமர்ந்து செய்தித்தாட்களில் பிரசுரிக்கப்பட்டிருந்த செய்திகள் பற்றி கலந்துரையாடுவதையும் அதிபர் டுட்டர்டே சில பலகார வகைகளை சாப்பிடுவதையும் காணொளி காட்டியது.
கடந்த அக்டோபர் மாதத்தில் அதிபர் டுட்டர்டே மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார்.
அவரது குடல் பரிசோதிக்கப் பட்டதில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்தது.
இந்தத் தகவல் வெளியான திலிருந்து அதிபர் டுட்டர்டேயின் உடல்நலம் குறித்து பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று உடல்நலம் இல்லாத காரணத்தி னால் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவில்லை என்றார் அதிபர் டுட்டர்டே.
உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டால் அதிபர் பதவியிலிருந்து தாம் விலகுவது உறுதி என்று அதிபர் டுட்டர்டே தெரிவித்திருந்தார்.
ஆனால் தமக்குப் பதிலாக எதிர்க்கட்சியினருக்குத் தலைமை தாங்கும் துணை அதிபர் லெனி ரோபிடேடோ அதிபராவது குறித்து அவர் அக்கறை தெரிவித்தார்.
‘உயிருடன் இருக்கிறேன்’
5 Feb 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Feb 2019 10:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!