பெட்டாலிங் ஜெயா: தன்னிடமிருந்து பெற்ற 44 நகைகளின் இருப்பிடத்தை மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் நிரூபிக்க வேண்டும் என்று லெபனானிய நகை நிறுவனம் ஒன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள குளோபல் ராயல்டி டிரேடிங் எஸ்ஏஎல் என்ற அந்த நகை நிறுவனத்தை வழக்கறிஞர் டேவிட் குருபாதம் பிரதிநிதிக்கிறார்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் திரு நஜிப்புக்குச் சொந்தமான இடங்களில் மலேசிய போலிசார் அதிரடிச் சோதனை நடத்திய போது நகைகளை அவர்கள் பறிமுதல் செய்ததாக திருவாட்டி ரோஸ்மா தெரிவித்துள்ளதாக திரு டேவிட் கூறினார்.
ஆனால் இது ஒரு சிவில் வழக்கு என்றும் வழக்கை எதிர்நோக்கும் திருவாட்டி ரோஸ்மா நகைகளின் இருப் பிடத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் திரு டேவிட் குறிப் பிட்டார். நகைகளைப் பார்வை யிட அவரிடம் அவற்றை அனுப்பி வைத்ததாக நகை நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில், அவரிடம் அனுப்பி வைக்கப்பட்ட நகை களைத் திருப்பி ஒப்படைக்குமாறு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதியன்று நிறுவனம் கேட்டுக்கொண்டது. அல்லது நகைகளுக்கான பணத்தைச் செலுத்த வேண்டும் என்று அது கூறியிருந்தது. திருவாட்டி ரோஸ்மா தனது நீண்டகால வாடிக்கையாளர் என்றும் அவரது கோரிக்கைக்கு இணங்கி நகை களை அவரிடம் அனுப்பி வைத்த தாக நிறுவனம் தெரிவித்தது.
அனுப்பிவைக்கப்பட்ட நகை களைப் பார்த்த பிறகு அவற்றை அவர் வாங்குவது வழக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.
நகைகளுக்கான பணத்தை அவரே செலுத்துவார் அல்லது இன்னொருவர் மூலம் செலுத் துவார் என்று நிறுவனம் குறிப் பிட்டது. நகை நிறுவனம் தமக்கு எதிராக தொடுத்துள்ள வழக் குக்கு எதிராக திருவாட்டி ரோஸ்மா இடைக்காலத் தடை பெற்றுள்ளதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
நகைகளின் இருப்பிடத்தை ரோஸ்மா நிரூபிக்கவேண்டும்
13 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Feb 2019 08:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!