மியூனிக்: அமெரிக்க-சீன பேச்சுவார்த்தையில் காணப்பட்ட கருத் திணக்கங்களை அமெரிக்கா நடைமுறைப்படுத்தும் என்று சீன கம்யூனிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் யாங் ஜிச்சீ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனால் ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடு களுக்கு இடையிலான உறவு மேலும் மேம்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது மியூனிக் நகரில் நடைபெற்று வரும் 55வது மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் சீன, அமெரிக்க உறவு பற்றிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
"உலகம் வாய்ப்புகளையும் சவால்களையும் எதிர்நோக்கியுள் ளது. இந்த நிலையில் எல்லா நாடு களும் மற்ற நாடுகளுக்கு ஒத் துழைப்புகளை வழங்குவது அவ சியம்," என்றார் அவர்.
சீன கம்யூனிச கட்சியின் மத்திய குழுவில் வெளியுறவு பிரிவின் இயக்குநருமான திரு யாங், "சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் இரு தரப்பு ஒருங்கிணைப்பு, ஒத்து ழைப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாட்டின் உறவு இருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே ஆக்ககரமான ஒத்து ழைப்பை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.
இரு தரப்பிலும் எட்டப்பட்டுள்ள கருத்திணக்கத்தை சுட்டிக்காட்டிய அவர், எதிர்காலத்தில் இரு நாட்டின் உறவு பயணிக்க வேண்டிய பாதையை அது காட்டுகிறது என்றார்.
சீனா-அமெரிக்க அரசதந்திர உறவு ஏற்பட்டு இவ்வாண்டோடு 40 ஆண்டுகள் ஆகிறது.
சீனா: கருத்திணக்கத்தை ஏற்று அமெரிக்கா செயல்பட வேண்டும்
18 Feb 2019 09:17 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Feb 2019 09:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!