இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறியப்ப டுகிறது.
மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று சென்னையில் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக நேற்று சென்னை வருவதாக இருந்த பாஜக தலைவர் அமித் ஷாவின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் அதிமுக, பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. பாமக வுக்கு ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிமுக, பாமக இடையே சென்னை நந்தனம் அருகே உள்ள கிரவுன் பிளாசா விடுதியில் கூட்டணி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நேற்று நடை பெற்றது.
பாமக தலைவர் எஸ்.ராமதாஸ், பாமக இளையர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரு டன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக செய்தி யாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம், அதிமுக கூட்ட ணியில் பாமகவுக்கு ஏழு தொகுதி கள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டிருப் பதாக தெரிவித்தார்.
21 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலி லும் அதிமுக போட்டியிடும் என்றும் இந்தத் தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என்றும் பன்னீர்செல்வம் கூறினார்.
2019-02-20 06:00:00 +0800
தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக பெரும் கூட்டணி; பாஜகவுக்கு 5, பாமகவுக்கு 7 தொகுதிகள்
20 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Feb 2019 09:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!