பிரபல தமிழ், தெலுங்கு திரைப்பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா உடல்நலக்குறைவால் நேற்று ஐதராபாத் மருத்துவமனையில் காலமானார்.
சுமார் 37 ஆண்டுகள் தெலுங்குத் திரை உலகில் கொடிகட்டிப் பறந்த கோடி ராமகிருஷ்ணா சுமார் 200 படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழில் அம்மன், அருந்ததி, கேப்டன் உள்ளிட்ட பல படங்களையும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்திப் படங்களையும் இயக்கியுள்ளார். கோடி ராமகிருஷ்ணா இழப்பால் தெலுங்குத் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. கோடி ராமகிருஷ்ணா படங்களை இயக்கியதோடு வெற்றிகரமான நடிகராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன்னர் நடிகை அனுஷ்கா நடிப்பில் இவர் இயக்கிய அருந்ததி படமும் தமிழ், ஹிந்தியில் பிரம்மாண்ட வெற்றி பெற்றன. இந்நிலையில் சமீப காலமாகவே நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்த கோடி ராமகிருஷ்ணா ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
கோடி ராமகிருஷ்ணா இயற்கை எய்தினார்
24 Feb 2019 08:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!