இன்று அதிகாலை நடந்த ஐரோப்பா லீக் காற்பந்து போட்டி ஆட்டங்களில் இங்கிலிஷ் குழுக்களான செல்சியும் ஆர்சனலும் வெற்றி கண்டுள்ளன.
செல்சி அணி யுக்ரேனின் டைனமோ கியவ் குழுவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி கண்டது. இவ்வாட்டத்தில் செல்சி ஆட்டக்காரர் ஒலிவியே ஷெரூ மூன்று கோல்களைப் புகுத்தி குழுவைக் கால்இறுதி சுற்றுக்கு முன்னேறச் செய்தார்.
போட்டியின் கால்இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்ற மற்றோர் இங்கிலிஷ் குழுவான ஆர்சனல், பிரெஞ்சு குழுவான ரென் குழுவை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆர்சனலின் இரண்டு கோல்களை நட்சத்திர முன்னணி ஆட்டக்காரர் உபமயாங் புகுத்தினார்.