லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் (இபிஎல்) பட்டியலில் முதல் இடத்திற்குத் திரும்ப லிவர்பூலுக்கு இன்று கிடைக்கவுள்ள வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு நிர்வாகி யர்கன் கிளோப் தமது ஆட்டக்காரர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது லிவர்பூலைவிட கூடு தலாக ஒரு புள்ளி பெற்று பட்டி யலில் முதலிடம் வகிக்கும் மான்செஸ்டர் சிட்டி, எஃப்ஏ கிண்ணக் காலிறுதிச் சுற்றில் நேற்று அதிகாலை சுவான்சி சிட்டி யுடன் பொருதியது.
இந்நிலையில், இன்றிரவு நடை பெறவுள்ள இபிஎல் ஆட்டத்தில் ஃபுல்ஹம் குழுவை லிவர்பூல் வென்றால், லீக் பட்டியலில் மேன் சிட்டியைவிட இரு புள்ளிகள் கூடு தலாக பெற்று அக்குழு முதல் இடத்திற்குத் திரும்பிவிடும்.
எனினும், பட்டியலில் இரண் டாவது கடைசி இடத்தில் உள்ள ஃபுல்ஹம், இடைக்கால நிர்வாகி ஸ்காட் பார்க்கரின்கீழ் எந்தவொரு நெருக்குதலுமின்றி விளையாடி வருவதால் அக்குழுவைக் குறைத்து எடைபோட வேண்டாம் என்று கிளோப் எச்சரித்துள்ளார்.
"பிரிமியர் லீக்கிலிருந்து ஃபுல்ஹம் வெளியேறுவது கிட்டத் தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், இனி காற்பந்தை ரசித்து விளை யாடுவதிலும் புள்ளிகளைப் பெறு வதிலும் அக்குழு கவனம் செலுத்தக்கூடும்," என்று ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் அவர் கூறினார்.
நடப்பு பருவத்தில் இவ்விரு குழுக்களும் கடைசியாக மோதிய ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது. எனினும், லிவர்பூலுக்கு அந்த ஆட்டம் எளிதான ஒன்றல்ல என்று கிளோப் நினைவுகூர்ந்தார்.
சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பயர்ன் மியூனிக் குழுவை அதன் சொந்த மண்ணில் 3-1 எனும் கோல் கணக்கில் வென்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள லிவர்பூல், ஃபுல்ஹம் அரங்கில் நடைபெறவுள்ள இந்த ஆட்டத்திற்கு தன்னம்பிக்கையுடன் தயாராகி வருகிறது.
பட்டியலில் முதலிடத்திற்கு திரும்ப லிவர்பூலுக்கு வாய்ப்பு
17 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Mar 2019 12:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!