கேப்டவுன்: 'சூப்பர் ஓவர்' வரை விறுவிறுப்பாகச் சென்ற இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகன் விருது வென்ற அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லரும் அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிரும் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தனர்.
சொந்த மண்ணில் முதன்முறையாக இலங்கை அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்து அவமானப் பட்ட தென்னாப்பிரிக்க அணி, அதன்பின் நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என முழுவதுமாக வென்று ஆறுதல் அடைந்தது.
இந்நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்தது. முதலில் பந்தடித்த இலங்கை அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
தென்னாப்பிரிக்க அணி இலக்கை எளிதாக எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக இலங்கை வீரர்கள் பந்துவீச்சில் ஓட்டம் குவிக்கத் திணறியது. இறுதியில், அவ்வணியும் எட்டு விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களையே எடுத்ததால் வெற்றியாளரைத் தீர்மானிக்க 'சூப்பர் ஓவர்' முறை பின்பற்றப்பட்டது.
அதில் முதலில் பந்தடித்த தென்னாப்பிரிக்க அணி 14 ஓட்டங்களை விளாச, இலங்கை அணி ஐந்து ஓட்டங்களை மட்டும் எடுத்து தோற்றுப்போனது.
சூப்பர் ஓவரில் வாகை சூடிய தென்னாப்பிரிக்கா
21 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Mar 2019 11:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!