மெக்டொனால்ட்ஸ் ஜூரோங் பௌல் கடையில் கடந்த வாரம் $12.65 செலுத்தி வாங்கிய 'கிளாசிக் ஆங்கஸ் சீஸ் பர்கரை' சாப்பிட்டபோது அதில் பிளாஸ்டிக் துண்டு ஒன்று இருந்ததாக வாடிக் கையாளர் கிரிஸ்டஃபர் கோ, 46, தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் நேற்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வாந்தி எடுத்த அவர், ஜூரோங் பலதுறை மருந்தகத்தில் மறுநாள் சிகிச்சை பெற்றதாகவும் அவருக்கு இரண்டு நாட்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்ட தாகவும் குறிப்பிட்டார். அதனை அடுத்து, திரு கோ போலிசில் புகார் செய்தார். புகார் அளிக்கப் பட்டதை போலிஸ் தரப்பு உறுதி செய்தது.
கடந்த திங்கட்கிழமை மாலை 6.25 மணியளவில் 1 யுவான் சிங் ரோட்டில் இருக்கும் கடையில் அந்த பர்கரை திரு கோ வாங்கிய தாகக் கூறப்பட்டது. வாயில் அகப்பட்ட பிளாஸ்டிக் துண்டு மிகவும் பெரியது எனவும் அது பர்கரில் முழுமையாக உருகியிருந் தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
திரு கோவின் பணத்தை அவரிடம் திருப்பிச் செலுத்திய கடை, அவருக்கு புதிய பர்கர் ஒன்றை வழங்கியது. இந்தச் சம்பவத்தின் தொடர்பில் வாடிக்கை யாளருடன் பேசி வருவதாகக் கூறிய மெக்டொனால்ட்ஸ் நிறு வனப் பேச்சாளர், "எங்களது தர உறுதிப்பாட்டுக் குழு உடனடியாக நடவடிக்கை எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளது," என்று கூறினார்.
மெக்டொனால்ட்ஸ் பர்கரில் பிளாஸ்டிக் துண்டு
18 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Apr 2019 09:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!