கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, மலே சியா பாதுகாப்பான நாடு என்றும் மலேசியாவுக்கு வரும் சுற்றுப் பயணிகளுக்கு பயண ஆலோ சனை தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
"மலேசியாவுக்கு மக்கள் தாராளமாக வரலாம், மலேசியா வுக்கு எதிராக பயண ஆலோ சனை எதுவும் விடுக்கத் தேவை யில்லை. மதிய உணவோ, இரவு விருந்தோ தயங்காமல் வரலாம் என்பதை உறுதியுடன் கூறுவேன். இங்கு நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்வீர்கள். ஆனால் சில நாடுகளில் வழிபாடு செய்யும்போதே கொன்று விடு வார்கள்," என்று அமெரிக்க மலேசியர் வர்த்தக தொழிற்சபை நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மகாதீர் சொன்னார்.
"ஒன்றிரண்டு பயங்கர வாதிகள் பிடிபட்டுள்ளார்கள். மற்றபடி மலேசியா பாதுகாப்பான நாடு," என்றார் அவர்.
கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அரசாங்கம் மலேசி யாவை 'கே' எனக் குறிப்பிடும் பயண ஆலோசனை பட்டியலில் சேர்த்தது. கிழக்கு சாபாவின் சில பகுதிகளில் ஆட்களைக் கடத்தும் அபாயம் இருப்பதால் மலேசியாவுக்கு செல்லும் அமெரிக்க பயணிகளுக்கு அந் நாட்டு அரசு ஆலோசனை வழங்கியிருந்தது. இதனையறிந்த மலேசிய வெளியுறவு அமைச்சு, அமெரிக்க தூதரான கமலா ஷிரின் லக் திரையை அழைத்து விளக்கம் கேட்டுள்ளது.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் மேலும் பேசிய டாக்டர் மகாதீர், ஏதோ ஒரு காரணத்திற்காக அமெரிக்க பயணிகள் இங்கு அதிகம் வருவதில்லை. அமெ ரிக்க விமானங்களோ நிறுவனங் களோ மலேசியாவுக்கு வருவ தில்லை. சிங்கப்பூருக்கு வரு கிறார்கள், ஆனால் மலேசியா வுக்கு வருவதில்லை. இது எனக்கு எப்போதுமே ஆச்சரிய மாக இருக்கும். நாங்களும் நல்ல வர்கள்தான்," என்றார்.
பிரதமர் மகாதீர்: மலேசியா பாதுகாப்பான நாடு
19 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Apr 2019 09:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!