‘கொடி’யில் அரசியல் ‘பஞ்ச்’ வசனங்கள்

ஒரு காலத்தில் 'பஞ்ச்' வசனம் பேசுவதில் முன்னணி நடிகர்கள் அனைவருமே ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் அண்மைக்காலமாக அது குறைந்து விட்டது. காரணம் ஆளாளுக்குப் பேச ஆரம்பித்ததால், அதற்கான வரவேற்பும் எதிர்பார்ப்பும் இல்லாமல் போனது. இருந்தாலும் அஜித், விஜய் போன்ற நடிகர்கள் சில காட்சிகளில் அளவோடு 'பஞ்ச்' வசனம் பேசி வருகிறார்கள். அந்தவகையில், தனுசும் தற்போது தனது 'கொடி' படத்தில் சில அரசியல் 'பஞ்ச்' எடுத்து விடுகிறாராம்.

இந்தப் படத்தில் இளம் அரசியல்வாதியாக தற்போது பொள்ளாச்சியில் நடித்து வரும் தனுஷ், நரைமுடி கரை வேஷ்டி அரசியல்வாதிகளுடன் மோதும் ஒரு அதிரடியான காட்சி அண்மையில் படமாக்கப்பட்டதாம். அப்போது, சில அரசியல் தலைவர்களை மறைமுகமாக பாதிக்கும் வகையில் பஞ்ச் வசனம் பேசி நடித்தாராம். அந்த வசனங்களுக்குத் திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் பெரிய கைதட்டல் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறாராம் தனுஷ்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!