தமிழ்நாடு: மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிப்பு

கடந்த பத்தாண்டுகளில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என்று தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது. 2005-=06 கணக்கெடுப்பின்படி 0.1 விழுக்காடாக, அதாவது 1,000 பெண்களில் ஒருவர் என்றிருந்த நிலவரம் 2015-16 முதற்கட்ட கணக்கெடுப்பின்படி 0.4 விழுக்காடாக, அதாவது ஆயிரத்திற்கு நான்கு பெண்களாகக் கூடியுள்ளது. இதே வேகத்தில் போனால் இன்னும் சில பத்தாண்டுகளில் தமிழகத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் மது அருந்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று பாட்டாளி மக்கள் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

"தமிழகத்தில் மதுவிற்கு அடி மையானோரின் எண்ணிக்கையும் அருந்தப்படும் மதுவின் அளவும் பெருமளவில் அதிகரித்திருப்பதாக வெளியாகியுள்ள உண்மை அதிர்ச் சியும் வேதனையும் அளிக்கிறது," என்று அவர் தெரிவித்தார். அண்மைய கணக்கெடுப்பின் படி விழுக்காட்டு அடிப்படையில் அதிக குடிகாரர்களைக் கொண் டுள்ள 4வது மாநிலம் தமிழகம். ஆனால், முதல் மூன்று இடங்களில் திரிபுரா, அந்தமான், சிக்கிம் என சிறிய மாநிலங்களே உள்ளதால் அதிகமான மது அடிமைகள் இருப்பது தமிழகத்தில்தான் என்று அவர் சுட்டினார். தமிழகத்தில் 15 முதல் 49 வய துக்குட்பட்ட ஆடவர்களில் 46.7 விழுக்காட்டினர்,

அதாவது கிட்டத் தட்ட பாதிப் பேருக்கு மதுப் பழக் கம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. தமிழகம் இப்படி குடிகார மாநி லமாக மாறியதற்கு டாஸ்மாக் மதுக் கடைகளே காரணம் எனக் குற்றம் சுமத்திய ராமதாஸ், இதில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒத்த நிலைப்பாட்டைக் கையாண்டு வருவது தமிழகத்தின் சாபக்கேடு என்றும் வேதனைப்பட்டார். 2016 தேர்தலில் வென்று பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் காரியம் மதுவிலக்கை அமல்படுத்துவது தான் என்றும் அவர் சொன்னார். இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் போடப்படும் முதல் கை யெழுத்து மதுவிலக்கு தொடர் பாகத்தான் இருக்கும் என்று கனி மொழி உறுதி கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!