பாசிர் ரிஸ், பொங்கோல் வட்டாரவாசிகள் அடுத்த மாதம் நான்காம் தேதி முதல் 'கோ எஹெட்' பேருந்துச் சேவைகளில் (படம்) பயணம் செய்யலாம்.
சிங்கப்பூரின் ஆகப் புதிய பேருந்து நிறுவனமான 'கோ எஹெட்', லோயாங் பேருந்துச் சேவை தொகுப்பை 25 பேருந்துச் சேவைகளுடன் தொடங் கும்.
முதல் கட்டமாக 13 பேருந்துச் சேவைகள் அறிமுகம் காணும். பின்னர், இரண்டாம் கட்டமாக 11 பேருந்துச் சேவைகள் செப்டம்பர் 18ஆம் தேதி அறிமுகப்படுத்தப் படும். அதன் 25வது பேருந்துச் சேவை அடுத்த ஆண்டு அறிமு கமாகும்.
இந்தத் தகவல்களை நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து 'கோ எஹெட்' நிறுவனம் நேற்று அறிவித்தது.
பேருந்துச் சேவைகளின் தரத்தை மேம் படுத்தும் நோக்கில் அரசாங்கத்தின் பேருந்து தொழில்துறையில் மறுசீரமைப் புத் திட்டத்தின்கீழ்ப் பேருந்து சேவை களை வழங்கும் இரண்டாவது வெளிநாட்டு நிறுவனம் 'கோ எஹெட்.'
பிரிட்டனின் 'டவர் டிரான்சிட்' நிறுவனம் அதன் சேவையை மே மாதம் தொடங் கியது.
"கோ எஹெட் நிறுவனத்தின் இந்தச் சேவை மாற்ற காலகட்டத்தில் பேருந்து நிறுவனங்களுடன் இணைந்து பயணிகளுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளைக் குறைப்பதுடன் சுமுகமான பயணத்தை வழங்கக் கடமை கொண்டுள்ளோம்," என்றார் நிலப்போக்குவரத்து ஆணையத் தின் தலைமை நிர்வாகி சியூ மென் லியோங்.
பயணப் பாதைகளையும் பயண நேர அட்டவணைகளையும் பற்றி அறிந்துகொள்ள பேருந்து களிலும் போக்குவரத்து முனை யங்களிலும் வைக்கப்படவிருக் கும் விளம்பர வெளியீடுகளை பயணிகள் எதிர்பார்க்கலாம் என்று 'கோ எஹெட்' நிறுவனம் தெரிவித்தது.
செப். 4ல் தொடங்கும் ‘கோ எஹெட்’ பேருந்துச் சேவைகள்
5 Aug 2016 02:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Aug 2016 16:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!