சிங்கப்பூர் பயணியிடம் கத்தை கத்தையாக அமெரிக்க கள்ளப் பணம் பறிமுதல்

ஏராளமான அமெரிக்க டாலர் நோட்டுகளை சிங்கப்பூருக்குக் கடத்தி வரமுயன்ற ஆடவர் சென்னையில் பிடிபட்டுள்ளார். சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 2 மணியளவில் விமானம் ஒன்று சிங்கப்பூருக்குப் புறப்படத் தயாரானது. பயணிகளின் உடைமைகளைச் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது ஆடவர் ஒருவரின் கைப்பை மீது அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அந்தப் பை நிறைய கத்தை கத்தையாக அமெரிக்க டாலர் நோட்டுகள் இருந்ததால் அவரைத் தனியாக அழைத்துச் சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அவரது உடைகளிலும் ஏராள மான அமெரிக்க டாலர் நோட்டுகள் மறைத்து வைக்கப் பட்டு இருந் ததை அதிகாரிகள் கண்டுபிடித் தனர். அதனைத் தொடர்ந்து கலீல் முகம்மது நியாசின் எனப் படும் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார். சுமார் 30 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் நோட்டுகள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன. அந்தப் பணத்துக்குரிய ஆவணங் கள் எதுவும் அவரிடம் இல்லா ததைத் தொடர்ந்து அவை அத் தனையும் கள்ளப் பணமா என்று போலிசார் விசாரித்து வருகின் றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!