புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் ஃபேஸ்புக்

பல்வேறு சர்ச்சைகள், முதற்கட்ட சோதனைகளைத் தொடர்ந்து ஃபேஸ்புக் சமூக ஊடகத்தின் பிரத்தியேகச் சின்னமான 'லைக்' புதுப்பொலிவு காணவிருக்கிறது. 'ரியாக்ஷன்ஸ்' என்னும் புதிய ஆறு அம்சங்கள் 'லைக்' பொத்தானுடன் இணைக்கப்பட உள்ளதாக 'புளூம்பெர்க் பிஸினஸ்' தெரிவித்துள்ளது. இந்தப் புதிய 'ரியாக்ஷன்ஸ்' தொகுப்பில் ஒரு பதிவு குறித்து ஒருவர் தன்னுடைய மகிழ்ச்சியை, வருத்தத்தை, கோபத்தை, வியப்பை, பாராட்டை, சிரிப்பை வெளிப் படுத்தும் விதமாக ஆறு அம்சங்கள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய அம்சங்கள் அடுத்த சில வாரங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஆறு அம்சங்களும் உணர்ச்சிகளை வெளிப் படுத்தும் உயிரோட்டமிக்கப் படங்களால் (animated images) பிரதிநிதிக்கப்படும். 'லைக்' பொத்தான் வசதி தொடர்ந்தாலும் குறிப்பிட்ட பதிவுக்கான தங்களது உணர்ச்சிகளைப் பயனாளர்கள் இனி துல்லியமாக வெளிப் படுத்த இயலும். அதே நேரத்தில், வெறும் 'லைக்' பொத்தானை மட்டும் அழுத்தும் வசதியும் நீடிக்கும். 'லைக்' பொத்தானை அழுத்தியவாறே இருந்தால் 'ரியாக்ஷன்ஸ்' தொகுப்பு தோன்றும். ஒரு பதிவு பிடித்திருக்கிறது என்பதைச் சொல்ல 'லைக்' வசதி இருப்பதுபோல பிடிக்கவில்லை என்பதைக் குறிப்பிட 'டிஸ்லைக்' வசதியும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பது பலரது வேண்டுகோள். ஆனால், அந்த யோசனையை ஃபேஸ்புக் நிராகரித்துவிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!