தொடங்கியது பொங்கல் குதூகலம்

இவ்வாண்டு பொங்கல் பண்டிகைக்கான ஒளியூட்டு விழா நேற்றிரவு சிராங்கூன் ரோட்டில் அமைந்துள்ள பிஜிபி அரங்க வளாகத்தில் கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. நிதி, கலாசார, சமூக, இளையர் துறை மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரதான மேடையில் ஒளியூட்டுக்கான விசையை அழுத்தியவுடன் லிட்டில் இந்தியா பகுதி ஒளி வெள்ளத்தில் மூழ்கியது.

"பொங்கல் திருநாள் தமிழர் கலா சாரத்தையும் மரபுடைமையையும் விளக் கும் விழாவாக அமைந்துள்ளது. ஏற் பாட்டுக் குழு அதன் அம்சங்களை சிறப் பாக வெளிப்படுத்தியுள்ளது பாராட்டுக் குரியது," என்றார் அமைச்சர் சிம் ஆன். பண்டிகைகள் குடும்ப ஒற்றுமை யையும் பிணைப்பையும் வலுப்படுத்தும் விழாக்களாக இருந்து வரும் உணர்வை நம் இளையர்களிடத்திலும் பரப்புவது அவசியம் என்றும் அவர் சொன்னார்.

ஒளியூட்டு அங்கத்துக்கு முன் நேற்று மாலை 6.30 மணி முதல் இந்தியாவின் பொங்கு தமிழ்க் குழுவைச் சேர்ந்த 49 கலைஞர்களும் சிங்கப்பூரின் பரதா ஆர்ட்ஸ் குழுவின் இரு கலை ஞர்களும் மலேசியாவின் ஆஸ்ட்ரோ விண்மீன் குழுவின் 29 கலைஞர்களும் இந்திய பாரம்பரிய நடனங்களான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற பல்வேறு நடனங்களை ஆடி பார்வை யாளர்களைப் பரவசப்படுத்தினர். செய்தி: சுதாஸகி ராமன்

ஒளியூட்டுக்கான விசையை அழுத்தி பொங்கல் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் (நடுவில்). படம்: ராஜராஜன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!