அனுஷ்கா ஒரு வில்லங்கமான காதல் கதை கொண்ட படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். அந்த படத்திற்கு 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி' என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
'பாகுபலி 2' படத்திற்கு பிறகு அவர் நடித்த 'சைலன்ஸ்' படம் 'ஓடிடி'யில் வெளியாகி படுதோல்வி அடைந்தது. அதனால் மனமுடைந்து போன அனுஷ்கா சில காலம் நடிக்காமல் இருந்தார். இனிமேல் கதையைத் தேர்வு செய்யும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால் அவர் தற்பொழுது தேர்ந்தெடுத்து இருக்கும் படம் வில்லங்கமான கதைக் கருவைக் கொண்டுள்ளது.
40 வயது பெண்ணுக்கும் இருபதுகளில் இருக்கும் ஆணுக்கும் இடையேயான காதல் பற்றிய படமாக உருவாக இருக்கிறது. அனுஷ்காவிற்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி நடிக்கிறார்.
நவீன், அனுஷ்காவை விட சிறியவர். இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. வெளிநாட்டுக்குச் சென்று உடல் எடையை குறைத்து வந்த அனுஷ்கா தற்போது மீண்டும் எடை அதிகரித்து விட்டார்.
அவர்
குண்டாக
இருக்கும் புகைப்படம் அண்மையில் வெளியாகி பலவிதமான விமர்சனங்
களைப் பெற்று வருகிறது.