அனுசரண் இயக்கத்தில் யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'பன்னி குட்டி'. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, டி.பி.கஜேந்திரன், லட்சுமி ப்ரியா, ராமர், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர்.
"இது முற்றிலும் கிராமப் பின்னணியில் உருவாகி உள்ள படம். தற்சார்பு பொருளாதாரத்தையும் சுயசார்பு வாழ்க்கையையும் வலியுறுத்தும் நல்ல கதையைச் சொல்லி இருக்கிறோம்.
"அதற்காக படம் முழுவதும் பாடம் நடத்துவது போன்ற காட்சிகள் இருக்காது. மாறாக முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாகி இருக்கிறது.
"யோகிபாபு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் படமும் அந்தப் பட்டியலில் இணையும் என உறுதியாக நம்புகிறோம்.
"கருணாகரன் வழக்கம்போல் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடிப்பை கச்சிதமாக வழங்கி உள்ளார்.
"இசையமைப்பாளர் கே இனிமையான பாடல்களையும் பின்னணி இசையையும் அமைத்துள்ளார். சதீஷ் முருகனின் ஒளிப்பதிவு கூடுதல் பலமாக அமைந்துள்ளது," என்கிறார் இயக்குநர்் அனுசரன்.
இப்படம் விரைவில் திரை காண உள்ளது.