யாஸ்மின் பேகம்
பிரேசில், ரியால் மட்ரிட் ஆகிய குழுக்களின் முன்னாள் பிரபல காற்பந்து நட்சத்திரம் ரொபெட்டோ கார்லோசும் சிங்கப்பூரின் முன் னாள் காற்பந்து ஆட்டக்காரரும் தொழில்நுட்பக்- கல்விக் கழக விளையாட்டுப் பிரதிநிதியுமான ஃபாண்டி அகமதும் நேற்று காலை தொழில்நுட்பக் கல்விக் கழக (செண்ட்ரல்) மாணவர்களைச் சந்தித்தார்கள். தொழில்நுட்பக் கல்விக் கழக செண்ட்ரல்) ஏற்பாடு செய்த 'விளையாட்டுகள் மூலம் நெறி முறைகள்' நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த ரொபெட்டோ கார்லோசும், ஃபாண்டி அகமதும் காற்பந்து அவர்களின் வாழ்வை எவ்வாறு வடிவமைத்தது என்பது குறித்து பகிர்ந்துக்கொண்டனர்.
தங்கள் கையொப்பங்கள் கொண்ட பந்துகளைக் கூடியிருந்த மாணவர்கள் நோக்கி அனுப்பும் ஃபாண்டி (இடது), ரொபெட்டோ கார்லோஸ் (நடுவில்). படம்: திமத்தி டேவிட்